
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் நேற்று நலம் விசாரித்தார்.
கரோனா தொற்று பரவல் தடுப்பு பணியில் காவல் துறையினரும் முன்கள வீரர்களாக ஈடுபட்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க கரோனா தொற்றால் பாதிக்கப்படும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து சென்னை பெருநகர காவல் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி இணைந்து அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஏசி டெக், நியூ பிளாக் விடுதி, கரோனா தொற்றால் பாதிப்படைந்த காவல்துறையினர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு சிசிச்சையளிக்கும் மையமாக ( கோவிட்-19 கேர் சென்டர்) மாற்றப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32U5wLw
0 Comments