
டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றவர்கள் உட்பட 148 இந்திய விளையாட்டு வீரர்கள் கரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.
148 வீரர்களில், 17 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் எடுத்துக் கொண்டுள்ளனர். மீதமுள்ள 131 வீரர்கள் முதல் டோஸ் எடுத்துக் கொண்டுள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் நரிந்தர் பத்ரா கூறியுள்ளார். இந்த 148 வீரர்களில் வரும் ஜூலை 23-ம் தேதி தொடங்கும் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கக்கூடிய வீரர்களும் அடங்குவர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments