
தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம், சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை தொடங்கியது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவை தற்காலிகத் தலைவர் கு.பிச்சாண்டி பதவிப்பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. கடந்த 7-ம் தேதி முதல்வராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் அவருடன் 33 அமைச்சர்களும் பதவி யேற்றனர். சட்டப்பேரவை முன்னவராக அமைச்சர் துரைமுருகன், தமிழக அரசு கொறடாவாக திருவிடைமருதூர் எம்எல்ஏ கோவி.செழியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2SFJhqS
0 Comments