https://ift.tt/3eZMlqv

ஆரணியில் அரசின் அனுமதி பெறாமல் கரோனா நோயாளி களுக்கு தற்காலிகமாக கூடாரத்தில் தங்க வைத்து சிகிச்சை அளித்த தனியார் கிளினிக்கிற்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் பழைய பேருந்து நிலையம் எதிரில் தனியார் கிளினிக் இயங்கி வருகின்றது. இங்கு, அரசின் முறையான அனுமதி பெறாமல் பெண் மருத்துவர் ஒருவர் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். மேலும், அந்த தனியார் கிளினிக்கில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை என கூறப்படுகிறது. கிளினிக்கின் எதிரே உள்ள காலி இடத்தில் தற்காலிக கூடாரம் அமைத்து கரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு படுக்கை அமைத்து சிகிச்சை அளித்து வந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3oyLIak

Post a Comment

0 Comments