https://ift.tt/3u63MuB

சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான வாக்குகள், 3 மையங்களில் இன்று எண்ணப்பட உள்ளன. கொளத்தூர் தொகுதியில் அதிக வேட்பாளர்கள் இருப்பதால், அதன் முடிவு வெளியாக 20 மணி நேரம் ஆகும் என மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஆர்.கே.நகர், திரு.வி.க.நகர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி ஆகிய தொகுதிகளில் வாக்குகள் பதிவான இயந்திரங்கள் சென்னை ராணி மேரி கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன. பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர் ஆகிய தொகுதிகளில் வாக்குகள் பதிவான இயந்திரங்கள் லயோலா கல்லூரியில் உள்ளவாக்கு எண்ணும் மையத்திலும்,விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய தொகுதிகளில் வாக்குகள் பதிவான இயந்திரங்கள் கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3nCt7dh

Post a Comment

0 Comments