
காட்பாடி தொகுதியில் முதல் முறையாக சட்டப்ரேவை தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரிடம் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கடுமையான போட்டிக்கு மத்தியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது திமு கவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடை பெற்றபோது நட்சத்திர வேட்பாளர் அந்தஸ்துள்ள காட்பாடி தொகுதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தமிழக அரசியலில் 50 ஆண்டு காலம் அனுபவம் கொண்டவரும் திமுக பொதுச் செயலாளருமான துரைமுருகன் இந்தத் தொகுதியில் 10-வது முறையாக போட்டியிட்டார். பழுத்த அரசியல்வாதியான துரை முருகனுக்கும் முதல் முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் களம் கண்ட அதிமுக வேட்பாளர் வி.ராமு மீதான எதிர்பார்ப்பு வாக்கு எண்ணிக்கையின்போது தெரிந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gZ1auX
0 Comments