https://ift.tt/34GC7oX

தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ் 2வரை தமிழ்வழிக் கல்வியை கட்டாயப்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என்றுதமிழறிஞர்கள், ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன்தலைமையிலான குழு வடிவமைத்த ‘தேசிய கல்விக் கொள்கை-2020’-க்கு மத்திய அரசு கடந்தஆண்டு ஜூலை 29-ம் தேதி ஒப்புதல் அளித்தது.அதைத் தொடர்ந்து 2021-ம் கல்வியாண்டுக்குள்புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதற்கேற்ப நாடு முழுவதும் கல்விக் கொள்கையின் அம்சங்கள் தற்போது படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், கலை, அறிவியல், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளை தாய்மொழியில் கற்பிக்க வேண்டும் என்று கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/34DE45E

Post a Comment

0 Comments