
கரோனா தொற்றின் 3-வது அலைவந்தாலும், அதைச் சமாளிக்க போதிய கட்டமைப்பு உள்ளது என்றுசுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், ரூ.1.30 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள, ஒருநிமிடத்துக்கு 1,000 லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரத்தின் செயல்பாட்டை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் முன்னிலையில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், இயந்திரத்தின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன், கீழ்ப்பாக்கம் அரசுமருத்துவமனை டீன் சாந்திமலர்,ராயப்பேட்டை அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஆர்.மணி,ஆர்எம்ஓ ஆனந்த் பிரதாப் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gBTEnN
0 Comments