ஜோதிடம்

ஹோவ்: இந்தியா - இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதும் 2வது டி20 போட்டி, ஹோவ் கவுன்டி மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஒரு ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரை சமன் செய்தது. தொடர்ந்து நடைபெற்ற 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா இழந்தது.அடுத்து 3 ஆட்டங்களை கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. நார்த்தாம்ப்டனில் நடந்த முதல் டி20ல், டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், இங்கிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 177 ரன் குவித்தது.அந்த அணியின் நதாலியே ரூத் ஸ்கிவர் 55 ரன் (27 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்), ஏமி ஜோன்ஸ் 43 ரன் (27 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), டேனியல் வியாட் 31 ரன் (28 பந்து, 3பவுண்டரி) விளாசினர். இந்திய தரப்பில் ஷிகா பாண்டே 3, பூனம், ராதா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.தொடர்ந்து 178 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. முதல் ஓவரின் 2வது பந்திலேயே ஷபாலி வர்மா டக் அவுட்டானார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஒரு ரன்னில் வெளியேறினார். கொஞ்ச நேரம் களத்தில் இருந்த ஸ்மிரிதி மந்தானா 29 ரன்(17 பந்து, 6 பவுண்டரி) விளாசினார்.இந்தியா 8.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 54 ரன் எடுத்திருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது ஹர்லீன் தியோல் 17*, தீப்தி சர்மா 4* ரன்னுடன் களத்தில் இருந்தனர். நீண்ட நேரம் காத்திருந்தும் மழை நிற்கவில்லை.டக்வொர்த் லூயிஸ் முறையில் இந்தியா 8.4 ஓவரில் 73 ரன் எடுத்திருக்க வேண்டும். ஆனால் இந்தியா 54 ரன் மட்டுமே எடுத்திருந்ததால் இங்கிலாந்து 18 ரன் வித்தியாத்தில் முதல் வெற்றியை வசப்படுத்தியது. இங்கிலாந்து வீராங்கனை ஸ்கிவர் ஆட்டநாயகியாக தேர்வானார். இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்க, 2வது டி20 போட்டி ஹோவ் கவுன்டி மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது. இந்த போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற இங்கிலாந்து அணியும், பதிலடி கொடுத்து 1-1 என சமன் செய்ய இந்தியாவும் வரிந்துகட்டுவதால் ஆட்டம் மிகவும் சுவாரசியமாக அமையும் என எதிர்பார்க்கலாம்.அடடா ஹர்லீன்இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி துரதிர்ஷ்டவசமாக டி/எல் விதிப்படி தோல்வியைத் தழுவியது. ஆனாலும்  இந்திய வீராங்கனை ஹர்லீன் தியோல் உலக கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களை வென்று இருக்கிறார். இங்கிலாந்து பேட் செய்தபோது ஷிகா பாண்டே வீசிய 19வது ஓவரின் 5வது பந்தை ஏமி ஜோன்ஸ் சிக்சருக்கு தூக்கி அடித்தார். அதை எல்லைக் கோட்டருகே எகிறிக் குதித்து பிடித்தார் ஹர்லீன். ஆனால்  தடுமாறி எல்லை கோட்டை தாண்டி குதிக்கப்போகிறோம் என்பதை உணர்ந்தவர், பந்தை எல்லைக்குள் தூக்கி எறிந்தார். எல்லைக்கு வெளியே வீழுந்து எழுந்தவர் உள்ளே ஓடி வந்து தான் எறிந்த பந்து தரையை தொடுவதற்குள் ‘கேட்ச்’ பிடித்து ஏமியை வௌியேற்றினார். அந்த வீடியோவை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட சச்சின் உட்பட கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள்  பகிர்ந்து வருகின்றனர்.வீரர்களுக்கு கல்வி வாய்ப்புசென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள   செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் இலவசமாக கல்வி கற்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.  இந்த ஆண்டும் பல்வேறு விளையாட்டு  பிரிவுகளின் கீழ் சுமார் 150 வீரர்கள், வீராங்கனைகளுக்கு வரும் 2021-22ம் ஆண்டு கல்வியாண்டில் வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. அதற்கான தகுதித் தேர்வு  கல்லூரி வளாகத்தில் ஜூலை 14ம் தேதி நடைபெறும். ஆர்வமுள்ள  தனிநபர், குழு விளையாட்டுகளில் ஆர்வம், அனுபவமுள்ள மாணவர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்று வெற்றி பெறுவதின் மூலம் பிஈ, பிடெக், எம்ஈ, எம்டெக், எம்பிஏ படிப்புகளில் சேரலாம்.  மேலும் விவரங்கள் அறிய: வி.செல்வகணபதி (98409 86678), ஐ.பசுபதி (73583 46871), ஜி.காமராஜ் (73583 46875).ஆண்கள் பைனலுக்கு பெண் நடுவர்விம்பிள்டன்  ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்துக்கு    நடுவராக குரோஷியாவை சேர்ந்த  மரிஜா சிகாக் (43) பணியாற்ற உள்ளார்.  விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்துக்கு ஒரு பெண் நடுவராக பணியாற்றப்போவது இதுவே முதல் முறையாகும். மரிஜா ஏற்கனவே 2014ம் ஆண்டு முதல் விம்பிள்டனில் நடுவராக இருந்து வருகிறார்.  கூடவே 2017ம் ஆண்டு  மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்துக்கு  நடுவராக மரிஜா பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.



from Dinakaran.com |11 Jul 2021 https://ift.tt/3xwKAIb
via IFTTT

Post a Comment

0 Comments