ஜோதிடம்

* ரிஷபை தொடர்ந்து அணியின் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடன்தொடர்பில் இருந்த மூத்த பயிற்சியாளர், 2 வீரர்கள் தனிமையில் வைக்கப்பட்டு உள்ளனர்.* கேப்டன் க்ருணால் பாண்டியாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக பரோடா அணியில் இருந்து தீபக் ஹூடா விலகியுள்ளார். வேறு அணிகள் அழைக்கும் என்று காத்திருக்கிறார்.* ஒலிம்பிக் போட்டியில் 4வது முறையாக பங்கேற்கும் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல்(39), ‘எனது மனைவி கூற்றுப்படி இது எனக்கு கடைசி ஒலிம்பிக். ஆனால் அடுத்த ஆண்டு நடக்க உள்ள காமன்வெல்த், ஆசிய விளையாட்டு போட்டிக்கு உடல் எப்படி ஒத்துழைக்கிறது என்பதை பார்க்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.* ‘ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ஜப்பான் வந்துள்ள 8000 பேருக்கு சோதனை செய்ததில் 3பேருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் தெரிவித்துள்ளார்.* இந்தியா நடத்தவுள்ள டி20 உலக கோப்பை போட்டி ஏற்பாடுகளை கவனிக்க பிசிசிஐ அலுவலர்கள் போட்டி நடக்கவுள்ள அமீரகம், ஓமன் நாடுகளுக்கு சென்றுள்ளனர்.* இங்கிலாந்து கால்பந்து வீரர்களை இனவெறியுடன் சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்த 4 பேரை லண்டன் போலீசார் கைது செய்துள்ளனர்.* தமிழ்நாடு பிரீமியர் லீக் (டிஎன்பிஎல்) 5வது தொடருக்கான இணை பங்குதாரராக பிகேடி டயர்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது.



from Dinakaran.com |16 Jul 2021 https://ift.tt/3hGg09m
via IFTTT

Post a Comment

0 Comments