ஆண்கள் டென்னிஸ் ஒற்ரையர் பிரிவு அரை இறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவுடன் நேற்று மோதிய நம்பர் வீரர் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 6-1, 3-6, 1-6 என்ற செட் கணக்கில் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். நடப்பு சீசனில் ஆஸி. ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டனில் பட்டம் வென்றுள்ள ஜோகோவிச் ஒலிம்பிக் மற்றும் யுஎஸ் ஓபனிலும் சாம்பியனாகி ‘கோல்டன் ஸ்லாம்’ சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மற்றொரு அரை இறுதியில் ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி வீரர் கரென் கச்சனோவ் 6-3, 6-3 என நேர் செட்களில் ஸ்பெயினின் பாப்லோ கரினோ புஸ்டாவை வீழ்த்தினார். தங்கப் பதக்கத்துக்காக ஸ்வெரவ் - கச்சனோவ் பலப்பரீட்சையில் இறங்குகின்றனர்.
from Dinakaran.com |31 Jul 2021 https://ift.tt/2Vafo3n
via IFTTT
0 Comments