ஜோதிடம்

மும்பை: கொரோனா பீதி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புரோ கபடி லீக் போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்ய ஆக.29ம் தேதி முதல் 3 நாட்களுக்கு மும்பையில் ஏலம் நடைபெற உள்ளது. கொரோனா பீதி, ஆட்டங்களை  ஒளிபரப்புவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக புரோ கபடி லீக் போட்டியின் 8வது தொடர் கடந்த ஆண்டு நடைபெறவில்லை. அதே நேரத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர், ஐஎஸ்எல் கால்பந்து தொடர்கள் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டாலும் கடந்த ஆண்டே நடத்தி முடிக்கப்பட்டன. இந்த ஆண்டுக்கான போட்டிகளும் நடைபெற உள்ளன. அதனால் இந்த ஆண்டு 8வது தொடரை நடத்த புரோ கபடி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. புதிய தொடருக்கான வீரர்களை தேர்வு செய்ய, இம்மாதம் 29, 30, 31 தேதிகளில் மும்பையில் ஏலம் நடைபெற உள்ளது. புரோ கபடி லீக் தொடரில்  உள்ள 12 அணிகளும்  தலா 4.4 கோடி ரூபாய் வரை செலவு செய்து வீரர்களை தேர்வு செய்யலாம். உள்நாட்டு, வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்கள் தகுதிக்கு ஏற்ப 4வகையாக பிரிக்கப்பட்டு முறையே 30, 20, 10, 6 லட்ச ரூபாய் குறைந்தபட்ச  ஏலத்தொகைகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. ஏலத்தில் பங்கேற்க சுமார் 500 வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு வசதியாக  அணிகள்  தாங்கள் தக்க வைக்க உள்ள, வெளியேற்றும் வீரர்களின் பட்டியலை விரையில் வெளியிடும். கூடவே ஒவ்வொரு அணியும் முன்னிலை வீரர்கள், இளம் வீரர்கள் ஆகியோரில் தலா 6 வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும்.



from Dinakaran.com |06 Aug 2021 https://ift.tt/3AguX8M
via IFTTT

Post a Comment

0 Comments