* அமெரிக்க நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் (39 வயது), காயம் காரணமாக அடுத்த வாரம் தொடங்க உள்ள யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார். இவர் யுஎஸ் ஓபனில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்றவர்.* வின்ஸ்டன் - சலம் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில், இங்கிலாந்து வீரர் ஆண்டி மர்ரே 6-7 (4-7), 3-6 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் பிரான்சிஸ் டியபோவிடம் தோற்று வெளியேறினார்.* ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீரர் ரவி தாஹியா, நார்வேயில் நடக்க உள்ள உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த தொடருக்கான தகுதிச் சுற்றில் பங்கேற்க போதிய அவகாசம் இல்லாததே இதற்கு காரணம் என அவர் கூறியுள்ளார்.* உலக யு20 தடகள போட்டியில் அசத்திய இந்திய குழுவினர், ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூரை நேற்று சந்தித்தனர். பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளை அவர், ‘எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் நீங்கள் தான்’ என்று வெகுவாகப் பாராட்டினார்.* தென் ஆப்ரிக்காவை சேர்ந்த இடது கை சுழற்பந்துவீச்சாளர் டாப்ரைஸ் ஷம்சி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.* செக் சர்வதேச ஓபன் டேபிள் டென்னிஸ் தொடரின் பைனலில் விளையாட இந்திய வீரர் ஜி.சத்யன் தகுதி பெற்றுள்ளார்.
from Dinakaran.com |26 Aug 2021 https://ift.tt/38cytVB
via IFTTT
0 Comments