* ஒலிம்பிக் போட்டியின் ஆண்கள் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடக்க உள்ள உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெல்வதே தனது உடனடி இலக்கு என தெரிவித்துள்ளார்.* ஒலிம்பிக்சில் விதிமுறைகளை மீறி ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக புகார் எழுந்ததை அடுத்து இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்படுவதாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மற்றொரு வீராங்கனை சோனம் மாலிக், விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.* 2028ல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்க உள்ள ஒலிம்பிக் தொடரில், கிரிக்கெட் விளையாட்டை சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.* ‘தங்க மகன்’ நீரஜ் சோப்ராவை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7ம் தேதி தேசிய ஈட்டி எறிதல் தினமாகக் கடைப்பிடிக்கப்படுவதுடன், நாடு முழுவதும் ஈட்டி எறிதல் போட்டிகள் நடத்தப்படும் என இந்திய தடகள கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
from Dinakaran.com |11 Aug 2021 https://ift.tt/3fQ5N9k
via IFTTT
0 Comments