* சமீபத்தில் நடந்த நேஷனல் பேங்க் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற கமிலா ஜார்ஜி (இத்தாலி), சின்சினாட்டி ஓபன் தொடரின் முதல் சுற்றில் 2-6, 2-6 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலாவிடம் தோற்று வெளியேறினார். முன்னணி வீராங்கனைகள் கரோலின் கார்சியா (பிரான்ஸ்), விக்டோரியா அசரென்கா (பெலாரஸ்), பெலிண்டா பென்சிக் (சுவிஸ்), கோகோ காப் (யுஎஸ்), சிமோனா ஹாலெப் (ருமேனியா) ஆகியோர் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.* மணிக்கட்டு காயம் காரணமாக யுஎஸ் ஒபன் தொடரில் இருந்து விலகுவதாக நடப்பு சாம்பியன் டொமினிக் தியம் (ஆஸ்திரியா) அறிவித்துள்ளார்.* பயிற்சி அகடமி மற்றும் விளையாட்டுப் பள்ளியை தொடங்குவது குறித்து சிந்தித்து வருவதாக பிரதமர் மோடியிடம் பேசிய பேட்மின்டன் நட்சத்திரம் பி.வி.சிந்து தெரிவித்துள்ளார்.* டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சாதனை வீரர் நீரஜ் சோப்ரா நேற்று அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.* லார்ட்ஸ் டெஸ்டில் ஆட்ட நாயகன் விருது பெற்ற இந்திய தொடக்க வீரர் கே.எல்.ராகுல், ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் 19 இடங்கள் முன்னேறி 37வது இடத்தை பிடித்துள்ளார்.* ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக அவிஷ்க குணரத்னே (இலங்கை) நியமிக்கப்பட்டுள்ளார்.* இந்திய அணியுடன் நடக்க உள்ள 3வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் சிப்லி நீக்கப்பட்டு டேவிட் மலான் சேர்க்கப்பட்டுள்ளார்.
from Dinakaran.com |19 Aug 2021 https://ift.tt/37V27yI
via IFTTT
0 Comments