ஜோதிடம்

தென் ஆப்ரிக்க வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் (38 வயது), கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் பதிந்த அவர், ‘20 ஆண்டு பயிற்சி, போட்டி, பயணம், வெற்றி, தோல்வி, காயம், சோர்வு, சகோதரத்துவம்... என்று சொல்வதற்கு நினைவுகள் ஏராளம்! நன்றி சொல்ல வேண்டிய முகங்கள் அதை விட அதிகம். நான் அதிகம் நேசித்த விளையாட்டில் இருந்து இன்று அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறுகிறேன். என்ன சாதித்தேன் என்பதை நிபுணர்கள் நிர்ணயிக்கட்டும். கசப்பும் இனிப்பும் கலந்த உணர்வு... அனைவருக்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார். தென் ஆப்ரிக்க அணிக்காக 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள ஸ்டெய்ன் 439 விக்கெட் (சிறப்பு 7/51) மற்றும் 1251 ரன் (அதிகம் 76); 125 ஒருநாள் போட்டிகளில் 196 விக்கெட் (சிறப்பு 6/39) மற்றும் 365 ரன் (அதிகம் 60); 47 டி20ல் 64 விக்கெட் (சிறப்பு 4/9) மற்றும் 21 ரன் எடுத்துள்ளார். இது தவிர, ஐபிஎல் டி20ல் சன்ரைசர்ஸ் ஐதராபாத் உள்பட உலகம் முழுவதும் பல்வேறு உள்ளூர் டி20 தொடர்களில் பல அணிகளுக்காக விளையாடி உள்ளார்.



from Dinakaran.com |01 Sep 2021 https://ift.tt/2Y4Ua8a
via IFTTT

Post a Comment

0 Comments