மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் வாசுதேவன் பாஸ்கரன், ‘இந்திய ஹாக்கிக்கு இது மிகவும் பெருமையான தருணம். இந்த நாளுக்காகதான் இத்தனை நாட்களாக காத்திருந்தோம். ஒவ்வொரு வீரருக்கும் என பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். நமது வீரர்கள் இனி தங்கங்களையும் வசப்படுத்துவார்கள்’ என்றார்.(பழைய படம் மாஸ்கோவில் 1980ம் ஆண்டு எடுக்கப்பட்டது).இந்தியாவுக்காக 2 ஒலிம்பிக் போட்டியில் விளையாடிய முன்னாள் வீரர் முகமது ரியாஸ், ‘41 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த இந்த வெற்றியின் மூலம் பழைய பொற்காலம் மீண்டும் திரும்புகிறது. வெண்கலம் வென்ற ஹாக்கி அணிக்கு எனது பாராட்டுகள்’ என்று தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |06 Aug 2021 https://ift.tt/3AhxxLQ
via IFTTT
0 Comments