இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச ஆட்டங்களில் சதமடிக்க முடியாமல் தடுமாறி வருவது குறித்து முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறுகையில், ‘கோஹ்லி டெஸ்ட் போட்டிகளில் 8 ஆயிரம் ரன் குவித்திருந்தாலும், தற்போது அவரது ஆட்டம் சரியில்லை. களமிறங்கிய கொஞ்ச நேரத்திலேயே, ஸ்டம்புக்கு வெளியே வரும் பந்துகளை தேவையின்றி விளையாடுகிறார். இப்போது பந்தை எதிர்கொள்ளும்போது பேட் எங்கோ இருக்கிறது, கால்கள் எங்கோ இருக்கின்றன. அவர் சரியாகப் பந்தை கணிப்பதாக தெரியவில்லை. உண்மையில் கோஹ்லி சரியாக விளையாட வில்லை. அவர் பழைய பாணியிலேயே விளையாடுவது அவசியம். இல்லாவிட்டால் சிக்கல்தான்’ என்றார்.
from Dinakaran.com |17 Aug 2021 https://ift.tt/3kghpDZ
via IFTTT
0 Comments