ஜோதிடம்

* புரோ கபடி 8வது சீசனுக்கான வீரர்கள் ஏலம்  ஆக.29, 30, 31 தேதிகளில் நடக்கிறது. அதற்கு  வசதியாக எல்லா அணிகளும் தக்க வைக்கப்பட்ட, விடுவிக்கப்படட் வீரர்களின் விவரங்களை வெளியிட்டுள்ளன. தமிழ் தலைவாஸ், யுபி யோதா அணிகள் யாரையும் தக்க வைக்கவில்லை.  * காயம் காரணமாக அவதிப்படும்   டென்னிஸ் வீரர் ரபேல் நடால்(ஸபெயின்)  இந்த ஆண்டு முழுவதும் எந்த தொடரிலும் பங்கேற்கப்போவதில்லை என்று  நேற்று அறிவித்தார். * நைரோபியில் நடைபெறும் உலக யு20 தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீராங்கனை ஷலைி சிங்,  மகளிர் நீளம் தாண்டுதலில்  இறுதிச் சுற்றுக்கு தகுதிப் பெற்றுள்ளார்.* மாலத்தீவில் நடைபெற உள்ள தெற்கு ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி  அக்.3ம்  தேதி வங்கதேசம், அக்.6ம் தேதி இலங்கை,  அக்.8ம் தேதி நேபாளம்,  அக்.11ம்தேதி மாலத்தீவு அணிகளுடன் மோத உள்ளது. இறுதிப்போட்டி அக்.13ம் தேதி நடக்கும்.* அமீரகத்தில் நடக்க உள்ள ஐபிஎல் தொடரில்  பங்கேற்க  சென்று உள்ள மும்பை இந்தியன்ஸ் அணி அங்கு  கொரோனா பரிசோதனை,  குவாரன்டைனை முடித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சியை தொடங்கியதாக  கூறப்படுகிறது.



from Dinakaran.com |21 Aug 2021 https://ift.tt/3j3Fkqu
via IFTTT

Post a Comment

0 Comments