ஜோதிடம்

பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சென்ற  இந்திய அணியுடன் பயணம் செய்தவருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனதால் தமிழக வீரர் மாரியப்பன் உட்பட 6 பேர்  தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர். பாரா ஒலிம்பிக் தொடக்கவிழாவில் மாரியப்பன் தேசியக் கொடியை  ஏந்திச்  செல்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், ஆக.17ம் தேதி விமானத்தில் சென்ற மாரியப்பன்  இருக்கைக்கு அருகில்  இருந்தவருக்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் அந்த விமானத்தில் பயணம் செய்த   மாரியப்பன், வட்டு எறிதல் வீரர் வினோத் குமார் உள்பட 6 இந்தியர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில்  இருக்கின்றனர். எனினும் மாரியப்பன், வினோத்  குமார் போட்டியில் பங்கேற்பதில் பிரச்னை இருக்காது என்று இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி  நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு கடந்த 6 நாட்களாக செய்யப்பட்ட  கொரோனா பரிசோதனைகளில் தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது.



from Dinakaran.com |25 Aug 2021 https://ift.tt/3sWsqOJ
via IFTTT

Post a Comment

0 Comments