ஜோதிடம்

டோக்கியோ: இந்திய ஆடவர் ஹாக்கி அணி 41 ஆண்டுகளுக்கு பிறகு  ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று, வரலாற்று சாதனை படைத்ததற்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுகளும், பரிசுகளும் குவிந்து வருகின்றன. அதேபோல்  மல்யுத்த பிரிவில் ஆக்ரோஷமாக துவங்கிய ரவிக்குமார், இறுதி ஆட்டத்தில் கடுமையாக போராடி தோற்ற போதிலும் இந்தியாவுக்கு 2வது வெள்ளி பதக்கம் வாங்கினார். அவருக்கும் இந்தியா முழுவதும் இருந்து பாராட்டு மழை குவிகிறது.ஒலிம்பிக் ஹாக்கி விளையாட்டு போட்டிகளில் அதிகம்  சாதித்த அணியாக  இந்திய ஆடவர் அணி இருக்கிறது.  இதுவரை 8 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம்  என 11 பதக்கங்களை வென்றிருந்தது. மாஸ்கோ ஒலிம்பிக்கில் 1980ம் ஆண்டு தங்கம் வென்றதுதான் இந்தியா வென்ற கடைசி பதக்கம். சுமார் 41 ஆண்டுகளாக ஹாக்கியில் பதக்கம் கனவாகவே தொடர்ந்தது.ஆனால், இந்த  ஆண்டு ஜப்பானில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக விளையாடியதால்  இந்திய  ஆடவர் அணி இறுதிப்போட்டிக்கு  முன்னேறும்  என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது.  ஆனால், இந்திய அணி  அரையிறுதியில் பெல்ஜியத்திடம்  தோல்வி அடைந்தது. அதனால்,  வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் நேற்று ஜெர்மனியை எதிர்கொண்டது.ஆட்டம் தொடங்கியதும் அதிரடி காட்டிய ஜெர்மனி, ஆட்டத்தின் 2வது நிமிடத்தில் கோலடித்து அசத்தியது. அந்த அணியின்  திமுர் ஒரூஸ்  அதிரடியாக இந்திய வீரர்களை ஏமாற்றி கோலடித்தார். அதனால்  முதல் கால்பகுதி ஆட்டத்தின் முடிவில் ஜெர்மனி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலைப் பெற்றது. வழக்கமாக எதிரணி கோலடித்தாலே சோர்ந்துப்போகும் இந்திய வீரர்கள் வழக்கத்துக்கு மாறாக ஆட்டத்தில் வேகத்தை கூட்டினர்.அதன் பலனாக ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி, சிம்ரன்ஜித் சிங் கோல் அடித்தார். அதற்கு பதிலடியாக  ஜெர்மனி வீரர்கள்   ஆட்டத்தின்  24வது நிமிடத்தில்  நிக்லஸ், 25நிமிடத்தில்  பெனடிக்ட் ஆகியோர் பீல்டு கோலடிக்க ஜெர்மனி  3-1 என்ற முன்னிலையுடன் வலுவான நிலையை எட்டியது. ஆனாலும், அசராத இந்திய வீரர்கள்   ஹர்திக் சிங் ஆட்டத்தின்  27வது நிமிடத்திலும்,   ஹர்மன் பிரீத் சிங் 29வது நிமிடத்திலும் பதில்  கோலடிக்க 2வது கால்பகுதி ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. சம பலத்துடன 3வது கால்பகுதி ஆட்டம் தொடங்கியது.  ஆட்டத்தின் 31வது நிமிடத்தில்  இந்தியாவுக்கு கிடைத்த பெனால்டிக்  ஸ்ட்ரோக்கை   ரூபிந்தர்பால் கோலாக்கி அதிரடித்தார்.  அதனால் இந்தியா 4-3 என முன்னிலை பெற்றது. அடுத்த சில நிமிடங்களில், ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் சிம்ரன்ஜித் சிங் தனது 2வது கோலை அடித்தார்.   அவர் அடித்த கோலால்  இந்தியா 5-3 என வலுவான நிலைமை எட்டியது. அதன் பிறகு இரு தரப்பும் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. அதனால் 3வது கால் பகுதி ஆட்டத்தின் முடிவில் இந்தியா 5-3 என என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. கடைசி கால்பகுதியில் வெற்றிப் பெற வேண்டும் என்ற முனைப்பில் ஜெர்மனி வேகம் காட்டியது.  அதன் பலனாக கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை  அந்த அணியின் லூகாஸ்  ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் கோலாக்கினார். அதன், பிறகு ஆட்டத்தில் அனல் பறந்தது. ஜெர்மனி வீரர்கள் அடுத்தடுத்து பெனால்டி வாய்ப்புகளுக்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். அப்படி கிடைத்த பெனால்டி வாய்ப்புகளை இந்திய கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் அசத்தலாக தடுத்து அணியை காப்பாற்றினார். கூடவே, இந்திய வீரர்கள் கோலடிக்கும் முயற்சியை கைவிட்டு  கோல் விழாமல் தடுப்பதில் கவனம் செலுத்தினர். ஆனாலும்,   கடைசி 6 விநாடிகள் இருக்கும்போதும் ஜெர்மனிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைக்க இந்தியாவின் வெற்றி கேள்விக் குறியானது. அந்த வாய்ப்பையும் ஸ்ரீஜேஷ் தடுக்க, மற்ற வீரர்கள் பந்தை நடுகளத்திற்கு விரட்டினர். அத்துடன் ஆட்டம் முடிவுக்கு வர இந்தியா 5-4 என்ற கோல கணக்கில் வெற்றிப் வெற்றது.  நீண்டநாட்களாக ஹாக்கியில் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற இந்தியாவின் கனவும் நிறைவேறியது. போட்டியில் 3வது இடம் பிடித்த இந்தியாவுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது. சுமார் 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் ஹாக்கியில் 12வது பதக்கம் வென்ற இந்திய அணியை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், விளையாட்டு பிரபலங்களும்,  பாராட்டினர்.கூடவே நாடாளுமன்ற மக்களவையிலும் இந்திய அணிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி வீரர்களுக்கு அந்தந்த மாநில அரசுகளும், மத்திய அரசு,  தனியார் நிறுவனங்கள் ரொக்கப் பரிசுகளை அறிவித்த வண்ணம் உள்ளன.மல்யுத்தத்தில் வெள்ளி சாதித்த ரவிக்குமார்ஒலிம்பிக்கில் நேற்று ஆடவர் 57கிலோ எடை பிரிவு மல்யுத்த இறுதி ஆட்டம் நடைபெற்றது. அதில் இந்திய வீரர் ரவிகுமார், ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி வீரர் ஜாவூர் உகுவை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி ஜாவூர் புள்ளிகளை குவிக்க ஆரம்பித்தார். அதனால் முதல் பகுதியில் ஜாவூர் 4-2 என்ற புள்ளி கணக்கில் முன்னிலைப் பெற்றார். தொடர்ந்து 2வது பகுதியில் ரவிகுமார் வேகம் காட்டி ஜாவூரை வெளியில் தள்ளினார். அவரும் வெளியில் நிற்பதாக கூறி புள்ளிகள் தரவில்லை. இந்திய பயிற்சியாளர் முறையிட்டும் பலனில்லை. அதனையடுத்து கடைசி நிமிடத்தில் ஜாவூர் கிடுக்குப்பிடி போட்டு ரவிகுமாரை நிறுத்த போட்டி முடிவுக்கு வந்தது. அதனால் ஜாவூர் 7-4 என்ற புள்ளிகணக்கில் வென்று தங்கம் வென்றார். ஆட்டத்தில் தோற்றாலும் 2வது இடம் பிடித்த ரவிகுமாருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.



from Dinakaran.com |06 Aug 2021 https://ift.tt/2TUXPnk
via IFTTT

Post a Comment

0 Comments