ஜோதிடம்

பெல்ஃபாஸ்ட்: ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்து கிளப்களுக்கு இடையே ஆண்டுதோறும் சாம்பியன்ஸ் லீக், சூப்பர் லீக் கால்பந்து கோப்பை கால்பந்து தொடர்கள் நடைபெறும். இந்த 2 தொடர்களிலும் சாம்பியன் பட்டம் வெல்லும்  2 அணிகள் மட்டும் மோதும் சூப்பர் கோப்பை போட்டியும் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும். இந்த ஆண்டு சாம்பியன் லீக் கோப்பையை வென்ற செல்சீயா (இங்கிலாந்து), ஐரோப்பிய லீக் கோப்பையை கைப்பற்றிய வில்லேரியல்(ஸ்பெயின்) அணிகள் நேற்று சூப்பர் கோப்பையில் மோதின. வடக்கு அயர்லாந்தில் உள்ள பெல்ஃபாஸ்ட் நகரில் நடந்த ஆட்டத்தில் இறுதி ஆட்டம் போல் அனல் பறந்தது. ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு கூடுதலாக விளையாடிய 30 நிமிடங்களிலும் யாரும் கோலடிக்கவில்லை. பெனால்டி ஷூட் முறையில் வெற்றி, தோல்வியை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது. அதில் செல்சீயா 6-5 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றதுடன் 2வது முறையாக சூப்பர் கோப்பையையும் வசப்படுத்தியது.



from Dinakaran.com |13 Aug 2021 https://ift.tt/3CStbNl
via IFTTT

Post a Comment

0 Comments