ஜோதிடம்

இந்தியா - இங்கிலாந்து இடையியே 2 டெஸ்ட்  ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த  இரு அணிகளும் மோதும் 3வது டெஸ்ட் ஆக.25ம் தேதி தொடங்குகிறது. கிட்டதட்ட ஒருவாரம் உள்ள நிலையில் 3வது டெஸ்ட் ஆட்டத்துக்கான  ஜோ ரூட் தலைமையிலான அணியை  இங்கிலாந்து வாரியம் அறிவித்துள்ளது.  கடந்த 2 டெஸ்ட்களில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய டொமினிக் சிப்லி, ஜாக் கிரெவ்லி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அதற்கு பதில் நட்சத்திர ஆட்டக்காரர்  டேவிட் மாலன் 3 ஆண்டுகளுக்கு பிறகும்,  சாகிப் முகமது முதல்முறையாகவும் டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளனர். மாலன் 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவுக்கு எதிராக விளையாடியதுதான் அவர் விளையாடிய கடைசி டெஸ்ட்.  மார்க் வுட் காயமடைந்துள்ளதால் அவருக்கு பதில் சாகிப் களம் காணக் கூடும். ஓய்வில்  இருக்கும் பென் ஸ்டோக்ஸ் அணியில் இடம் பெறாவிட்டாலும், இக்கட்டான நேரத்தில் அணிக்கு திரும்புவார் என்ற ஆவலுடன் அணியும், ரசிகர்களும் இருக்கின்றனர்.



from Dinakaran.com |20 Aug 2021 https://ift.tt/3miycsG
via IFTTT

Post a Comment

0 Comments