ஜோதிடம்

மும்பை: இந்திய வீரர்கள்  அடுத்தடுத்து சர்வதேச போட்டிகள், ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளதால்  ரஞ்சி கோப்பை  டெஸ்ட் தொடர் அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்படடுள்ளது.  பிசிசிஐ  நடத்தும் உள்நாட்டு தொடர்களில்,  ஆடவர்களுக்கான ரஞ்சி கோப்பை(டெஸ்ட்), விஜய் ஹசாரோ கோப்பை(ஒருநாள்), சையத் முஷ்டக் அலி(டி20) தொடர்கள் முக்கியமானவை. இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடிக்க வாயிலாக இந்த தொடர்கள் உள்ளன. ரஞ்சி கோப்பை 1934-35ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வந்தது. முதல்முறையாக கடந்த ஆண்டு கொரோனா பீதி காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.

பின்னர் ரத்து செய்யப்பட்டது. அதே நேரத்தில் கடந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட  விஜய் ஹசாரே, முஷ்டாக் அலி தொடர்கள் இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடத்தி முடிக்கப்பட்டன. தொடரும் கொரோனா பரவல், தள்ளி வைக்கப்பட்ட ஐபிஎல், உலக கோப்பை டி20  போன்ற காரணங்களால்  இந்த ஆண்டுக்கான உள்நாட்டு தொடர்கள் நடத்தப்படுமா என்ற கேள்வி தொடர்ந்தது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான ரஞ்சி கோப்பை தொடரை  அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி ரஞ்சி டெஸ்ட் தொடர் 5-1-22 முதல்  20-3-22 வரை நடைபெறும்.
முதல்முறையாக..முதல்முறையாக மாநிலங்களுக்கு இடையிலான ஆடவர் ஒருநாள் தொடர் நவ.9 முதல் டிச.10ம் தேதி வரை நடைபெற உள்ளது.  கூடவே   இந்த ஆண்டுக்கான  விஜய் ஹசாரே ஒருநாள் தொடர் இந்த ஆண்டு டிச.1ம் தேதி முதல் டிச.29ம் தேதி வரையிலும், முஷ்டாக் அலி டி20  தொடர்  அக்.27ம் தேதி முதல் நவ.22ம்  தேதி வரையிலும்  நடக்கும். மகளிர் ஒருநாள் போட்டித் தொடர் அக்.20 முதல் நவ.20ம்தேதி வரையிலும்  என 13 வகையான தொடர்களுக்கான தேதியை பிசிசிஐ அறிவித்துள்ளது.


from Dinakaran.com |21 Aug 2021 https://ift.tt/3B0pBPa
via IFTTT

Post a Comment

0 Comments