ஜோதிடம்

ஒலிம்பிக் ஆண்கள் உயரம் தாண்டுதலில் சிறப்பாக செயல்பட்ட கத்தார் வீரர் பார்ஷிம் முடாஸ் எஸ்ஸா, இத்தாலி வீரர் டம்பெரி கியான்மார்கோ இருவரும் தலா 2.37 மீட்டர் தாண்டி சமநிலை வகித்த நிலையில், டம்பெரி காயம் காரணமாக தொடர்ந்து தாண்ட முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கத்தார் வீரருக்கு தங்கமும், இத்தாலி வீரருக்கு வெள்ளியும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மேற்கொண்டு முயற்சிக்காமல் தானும் விலகினால் இருவருக்கும் தங்கம் கிடைக்குமா என பார்ஷிம் கேட்க, நடுவர்களும் அதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து தங்கப் பதக்கத்தை இருவரும் பகிர்ந்து கொண்டனர். விளையாட்டு நெறிக்கு உதாரணமாக அமைந்த இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.



from Dinakaran.com |04 Aug 2021 https://ift.tt/3ltd3LY
via IFTTT

Post a Comment

0 Comments