சென்னை: ஐக்கிய அமீரகத்தில் நடக்க இருக்கும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க, டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் நேற்று சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில் துபாய் சென்றனர். கொரோனா 2வது அலையின் தாக்கம் கடந்த மே மாதம் உச்சத்தை எட்டியது. அதனால் இந்தியாவில் நடந்து கொண்டிருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், எஞசிய போட்டிகளை ஐக்கிய அமீரகத்தில் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் செப்டம்பர் 19ம் தேதியில் இருந்து ஐக்கிய அமீரகத்தில் ஐபிஎல் தொடர் தொடங்கி நடக்க உள்ளது. இதில் பங்கேற்கும் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 55 பேர் கொண்ட குழுவினர், தனிவிமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி வழியாக நேற்று பகல் 12.10 மணிக்கு துபாய் புறப்பட்டுச் சென்றனர்.
from Dinakaran.com |14 Aug 2021 https://ift.tt/3g1s3Nc
via IFTTT
0 Comments