ஜோதிடம்

பாரா ஒலிம்பிக் ஆண்கள் வட்டு எறிதல் எப்-56 பிரிவில் இந்திய வீரர் யோகேஷ் கதுனியா  வெள்ளிப் பதக்கம் வென்றார். தகுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்டு பைனலுக்கு முன்னேறிய யோகேஷ் கதுனியா, இறுதிப் போட்டியில் 44.38 மீட்டர் தொலைவுக்கு வட்டு வீசி 2வது இடம் பிடித்தார். அதன் மூலம் இந்தியாவுக்கு 4வது வெள்ளிப்பதக்கம் உறுதியானது. நடப்பு சீசனில் இது அவரது சிறந்த செயல்பாடாகவும் அமைந்தது. பிரேசில் வீரர் சான்டோஸ் கிளாடினி (45.59 மீட்டர்) தங்கமும், 3வது இடம் பிடித்த  கியூபா வீரர் லியோனார்டோ டயஸ் (43.36 மீ.)  வெண்கலமும் வென்றனர்.



from Dinakaran.com |31 Aug 2021 https://ift.tt/3zvx6gO
via IFTTT

Post a Comment

0 Comments