லீட்ஸ்: ஆடுகளத்தில் இந்திய வீரர் முகமது சிராஜ் மீது இங்கிலாந்து ரசிகர்கள் பந்து வீசி அடாவடிச் செயலில் ஈடுபட்டட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து-இந்தியா இடையிலான 3வ டெஸ்ட் ஆட்டம் லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி அரங்கில் நடக்கிறது. முதலில் விளையாடிய இந்திய அணி 78 அணியில் மூட்டை கட்டியது. அதனால் அரங்கில் இருந்த இங்கிலாந்து ரசிகர்கள் உற்சாகத்தில், இந்திய வீரர்களை கிண்டல் கேலி செய்து குரலெழுப்பினர். ஆனால் அதனை இந்திய வீரர்கள் கண்டுக்கொள்ளவில்லை. ஆனால், பீல்டிங் செய்துக் கொண்டு இருந்த வேகம் முகமது சிராஜ் மீது அரங்கில் இருந்த ரசிகர் ஒருவர் பந்தை வீசினார். சிராஜ் எதோச்சையாக நகர்ந்ததால் அவர் பக்கத்தில் வீழ்ந்தது. அதனால் எரிச்சலான சிராஜ் பந்து வீசிய திசையை நோக்கி விரலை காட்டி எச்சரிக்கை செய்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரிஷப், ‘ சிராஜை தாக்க வேண்டும் என்ற நோக்கில் வீசப்பட்டதா என்பது தெரியவில்லை. ஆனால் ரசிகர்களின் இந்தச் செயலால் கோஹ்லி வருத்தப்பட்டார். ரசிகர்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்களோ அதை சொல்லலாம். ஆனால் களத்தில் இருக்கும் வீரர்கள் மீது இப்படி பொருட்களை எறிய வேண்டாம். அது கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல’ என்றார். இங்கிலாந்து ரசிகர்களின் இந்த அடாவடிச் செயல் கேப்டன் கோஹ்லியை எரிச்சலடைய வைத்தது. ஆனாலும் இது குறித்து இந்திய அணி தரப்பில் எந்த புகாரும் அளிக்கவில்லை. ஏற்கனவே லார்ட்ஸ் டெஸ்ட் ஆட்டத்தின் போது இந்திய வீரர் ராகுல் மீது இங்கிலாந்து ரசிகர் ஒருவர் ஷாம்பெயின் பாட்டிலின் மூடியை வீசினார். அப்போதும் இந்திய அணி புகார் ஏதும் தரவில்லை.
from Dinakaran.com |27 Aug 2021 https://ift.tt/3Bj7dkC
via IFTTT
0 Comments