ஆண்டர்சன் பந்தில் 7வது முறையாக ஆட்டமிழந்து வெளியேறிய விராத் கோஹ்லியை அரங்கில் இருந்த ‘பார்மி ஆர்மி’ பேண்டு வாத்தியங்களை இசைத்து வழி அனுப்பி வைத்தனர். அதனால் பார்மி ஆர்மி மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட்டை தீவிரமாக ஆதரிக்கும் ரசிகர்களுக்கு ‘பார்மி ஆர்மி’ என்று பெயர். பார்மி என்ற இங்கிலாந்து வழக்கு சொல்லுக்கு ‘நேசமான, விருப்பமான’ என்று நாசுக்காக அர்த்தம் சொல்லலாம். கூடவே ‘பைத்தியமான’ என்பது கூட சரியான அர்த்தமாக இருக்கலாம். யாரோ ஆரம்பித்த பார்மி ஆர்மி(நேசப்படை) இப்போது நிறுவனம் போல் செயல்படுகிறது. ஒரே மாதிரியான சீருடை அணிந்தும், வாத்தியங்களுடன் உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் இங்கிலாந்து ஆடும் ஆட்டங்களை ஆடியும், பாடியும் ஆதரிப்பார்கள். கூடவே எதிரணியை எரிச்சலூட்டும் வேலைகளையும் செய்வார்கள்.
from Dinakaran.com |27 Aug 2021 https://ift.tt/2Y0FBCJ
via IFTTT
0 Comments