* எஸ்எல்4 முதல் அரையிறுதியில் இந்திய வீரர் சுகாஸ் யதிராஜ் 2-0 என நேர் செட்களில் இந்தோனேசிய வீரர் சேய்ட்வன் பிரெடியை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியுள்ளார். பைனலில் லூகாஸ் (பிரான்ஸ்) உடன் மோதுகிறார்.* எஸ்எல்4 பிரிவு 2வது அரையிறுதியில் இந்தியாவின் தருண் 1-2 என்ற செட்களில் பிரான்ஸ் வீரர் லூகாசிடம் தோற்றார். அதனால் இன்று நடைபெறும் வெண்கலத்திற்கான ஆட்டத்தில் சேடியாவன் பிரெடி (இந்தோனேசியா) உடன் மோதுகிறார். * எஸ்எச்6 பிரிவு முதல் அரையிறுதில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் 2-0 என நேர் செட்களில் இங்கிலாந்தின் வீரர் கிறிஸ்டன் கூம்பசை வீழ்த்தினார். அவர் இன்று நடைபெறும் பைனலில் ஹாங்காங் வீரர் கய் மன் சூ உடன் விளையாடுகிறார்.* எஸ்எல் 3 கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பிரமோத் பகத் - பலாக் கோஹ்லி ஜோடி 0-2 என்ற செட்களில் இந்தோனேசியாவின் சுசாந்தோ ஹரி - ஒக்டிலா லெனி ஜோடியிடம் தோற்றது. 3வது இடத்துக்காக இன்று ஜப்பானின் டய்சுகே புஜிஹரா - அகிகோ சுகினோ ஜோடியை சந்திக்கின்றனர்.* இவை தவிர 50 மீட்டர் ரைபிள் புரோன் கலப்பு (ஆர்6) துப்பாக்கிசுடும் போட்டியில் இன்று சித்தார்த்தா பாபு, தீபக், அவனி லெகரா ஆகியோர் களமிறங்குகின்றனர்.
from Dinakaran.com |05 Sep 2021 https://ift.tt/3BKDuBI
via IFTTT
0 Comments