ஜோதிடம்

சிகாகோ: அமெரிக்காவில் நடைபெறும் சிகாகோ ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு உள்ளூர் வீராங்கனை டேனியலி கோலின்ஸ் முன்னேறினார். 2வது  சுற்றில்  டேனியலி (27 வயது, 28வது ரேங்க்), ஜப்பான் வீராங்கனை மிசகி டோய் (30 வயது, 111வது ரேங்க்) மோதினர். அதில் டேனியலி 4-6, 6-3, 7-5 என்ற செட்களில் போராடி வென்றார். மற்றொரு 2வது சுற்றில் துனிசியாவின் ஆன்ஸ் ஜெபர் (27 வயது, 16வது ரேங்க்) 6-1, 6-0 என்ற நேர் செட்களில் சீன தைபே வீராங்கனை சூ வெய் சையை (35 வயது, 97வது ரேங்க்) வீழ்த்தினார். இந்த ஆட்டம் வெறும் 46 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. முன்னணி வீராங்கனைகள் முகுருசா (ஸ்பெயின்), கோன்டாவெய்ட் (எஸ்டோனியா), அசரென்கா (பெலாரஸ்), மார்டின்கோவா (செக்.), ஜில் தெய்க்மன் (சுவிஸ்) ஆகியோரும் 3வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.



from Dinakaran.com |30 Sep 2021 https://ift.tt/3ii6dqb
via IFTTT

Post a Comment

0 Comments