ஜோதிடம்

விருதுக்கு பரிந்துரைஇந்த ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான பரிந்துரை பட்டியலில்,  3 பாரா ஒலிம்பிக்  போட்டிகளில் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் தேவேந்திரா ஜஜாரியா, முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத், முன்னாள் குத்துச்சண்டை வீராங்கனை எல்.சரிதா தேவி  ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி முகுந்தகம் சர்மா தலைமையிலான குழு இந்த பரிந்துரைகளை செய்துள்ளது.மவுசு குறையும்உலக கோப்பை கால்பந்து போட்டியை 4 ஆண்டுகளுக்கு பதில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்துவது குறித்து பிபா ஆலோசித்து வருகிறது. அதற்கு கால்பந்து கிளப்கள் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கூடவே வேல்ஸ் அணியின் கேப்டன் கேரத் பால், ‘உலக கோப்பை  மதிப்பு வாய்ந்தது.  அதை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தினால் அந்த மதிப்பும், எதிர்பார்ப்பும் குறைந்து போகும். அது தவறான முடிவு’ என்று தெரிவித்துள்ளார்.ரத்தாகுமா குளிர்கால ஒலிம்பிக்?‘சீனாவில் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பிபிசி உள்பட முன்னணி ஊடகங்கள் அங்கு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியை ஒளிபரப்பாமல் புறக்கணிக்க வேண்டும். அப்படி ஒளிபரப்பினால் சீனாவின் மனித உரிமை மீறல்களுக்கு அவர்களும் உடந்தையாக இருப்பதாகவே அர்த்தம்’ என்று சர்வதேச திபெத் கூட்டமைப்பின் தலைவர் டெட்ஹாங் கூறியுள்ளார். இந்த தொடரை ரத்து செய்ய மனித உரிமை குழுக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.



from Dinakaran.com |09 Sep 2021 https://ift.tt/3BWpp3R
via IFTTT

Post a Comment

0 Comments