சார்ஜா: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. 136 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய மும்பை அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
from Dinakaran.com |29 Sep 2021 https://ift.tt/3kQP2h7
via IFTTT
0 Comments