கொரோனாவால் கடந்த ஆண்டு முதல் முறையாக ரஞ்சி போட்டி ரத்தானது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான போட்டியும் அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டு ஜன. 5 முதல் மார்ச் 20 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இப்போது அந்த தேதியையும் பிசிசிஐ மாற்றி அறிவித்துள்ளது. அதன்படி ரஞ்சி தொடர் அடுத்த ஆண்டு ஜன. 13ம் தேதி தொடங்கும். நாக் அவுட் சுற்று பிப்.20ல் தொடங்கும். இறுதிப்போட்டி மார்ச் 16-20 வரை கொல்கத்தாவில் நடைபெறும். மற்ற போட்டிகள் மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, அகமதாபாத், திருவனந்தபுரம், சென்னையில் நடத்தப்படும்.
from Dinakaran.com |02 Sep 2021 https://ift.tt/3kOf2Iq
via IFTTT
0 Comments