ஜோதிடம்

* இந்திய மகளிர்  கால்பந்து அணி  கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு நட்புரீதியிலான சர்வதேச ஆட்டங்களில்  அமீரகம், துனிசியா, பக்ரைன்,  சீன தைபே மகளிர் அணிகளை எதிர்த்து விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில்  ஐக்கிய அரபு அமீரக அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. தொடர்ந்து  துனிசியா அணியிடம் நன்றாக விளையாடியும் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்றது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்டத்தில் பக்ரைனை 5-0 என்ற கோல் கணக்கில்  பந்தாடியது. அடுத்து தனது கடைசி ஆட்டத்தில் இன்று   இரவு சீன தைபேவுடன் மோதுகிறது.* தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்போட்டி  மாலத்தீவில் நடக்கிறது.  இந்தியா, மாலத்தீவு,  வங்கதேசம், நேபாளம், இலங்கை அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. இதுவரை நடந்த போட்டிகளில்  தலா 2 வெற்றிகளுடன்  முறையே மாலத்தீவு, நேபாளம் அணிகள் முதல் 2 இடங்களில் உள்ளன. இந்தியா  3 ஆட்டங்களில் விளையாடிய  ஒரு வெற்றி, 2 டிராவுடன்  3வது இடத்தில் உள்ளது. இன்று நடைபெறும் கடைசி ஆட்டத்தில்  மாலத்தீவை எதிர்கொள்கிறது. இதில் வென்றால் இந்தியா பைனலுக்கு முன்னேறலாம். டிரா செய்தாலோ,  தோல்வியடைந்தாலோ கோப்பை கனவை கைவிட்டு நாடு திரும்ப வேண்டியதுதான்.* இந்திய ஆடவர் கால்பந்து அணியின் கேப்டன் சுனில் செட்ரி (37). இவர் ஞாற்றுக்கிழமை நடந்த ஆட்டத்தில் நேபாளத்துக்கு எதிராக ஒரு வெற்றி கோலை அடித்தார். அதன் மூலம் கால்பந்து ஜாம்பவான்  பிரேசில் முன்னாள் வீரர் பீலேவின் சாதனையை செட்ரி சமன் செய்துள்ளார். இருவரும் தாய் நாட்டுக்காக சர்வதேச ஆட்டங்களில் தலா 77 கோல் அடித்துள்ளனர். பீலே 92 போட்டியிலும், செட்ரி 123 போட்டியிலும் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். சர்வதேச அளவில் இவர்கள் இருவரும்  அமீரக வீரர்  அலி மபாகத்துடன் (77 கோல்கள், 95 ஆட்டங்கள்) 3வது இடத்தை  பகிர்ந்து கொள்கின்றனர். போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ  (112 கோல், 181 ஆட்டம்) முதல் இடத்திலும்,  அர்ஜென்டினாவின் மெஸ்ஸி (80 கோல், 155 ஆட்டம்)  2வது இடத்திலும் உள்ளனர்.* ஐசிசி உலக கோப்பை டி20 போட்டித் தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள எம்.எஸ்.தோனி, இதற்காக எந்த ஊதியத்தையும் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.* எலிமினேட்டர் ஆட்டத்தில் கேகேஆர் அணியிடம் தோற்று வெளியேறிய ஆர்சிபி அணியின் கேப்டன் விராத் கோஹ்லி, தங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.* உபெர் கோப்பை பேட்மின்டன் தொடரின் காலிறுதியில் விளையாட இந்திய மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது.* உலக கோப்பை டி20 போட்டிக்கான இந்திய அணியில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக ஆவேஷ் கான் சேர்க்கப்பட்டுள்ளார்.



from Dinakaran.com |13 Oct 2021 https://ift.tt/30eLr4l
via IFTTT

Post a Comment

0 Comments