ஜோதிடம்

கராரா: இந்திய மகளிர் அணியுடனான பகல்/இரவு டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 143 ரன் எடுத்து திணறி வருகிறது. கராரா ஓவல் மைதானத்தில் செப். 30ம் தேதி தொடங்கி நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸி. அணி முதலில் பந்துவீசியது. 2ம் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 276 ரன் எடுத்திருந்த இந்தியா, நேற்று 8 விக்கெட் இழப்புக்கு 377 ரன் என்ற ஸ்கோருடன் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. மந்தனா 127, ஷபாலி 31, பூனம் ராவுத் 36, மிதாலி 30, தீப்தி 66, தானியா 22 ரன் விளாசினர். ஜுலன் 7. மேக்னா சிங் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. பந்துவீச்சில் பெர்ரி, கேம்ப்பெல், மோலினியூக்ஸ் தலா 2, கார்ட்னர் 1 விக்கெட் வீழ்த்தினர்.அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸி. அணி, 3ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 143 ரன் எடுத்துள்ளது. அலிஸ்ஸா 29, பெத் மூனி 4, கேப்டன் மெக் லான்னிங் 38, டாலியா மெக்ராத் 28 ரன்னில் ஆட்டமிழந்தனர். எல்லிஸ் பெர்ரி 27, ஆஷ்லி கார்ட்னர் 13 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இந்திய பந்துவீச்சில் ஜுலன் கோஸ்வாமி, பூஜா வஸ்த்ராகர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். கைவசம் 6 விக்கெட் இருக்க, ஆஸி. 234 ரன் பின்தங்கியுள்ள நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. முதல் 2 நாள் ஆட்டமும் கனமழையால் பாதிக்கப்பட்டதால், இப்போட்டி டிராவை நோக்கி செல்கிறது.



from Dinakaran.com |03 Oct 2021 https://ift.tt/3osmIUh
via IFTTT

Post a Comment

0 Comments