ஜோதிடம்

* கத்தார் அணியுடன் நடந்த நட்புரீதியிலான சர்வதேச கால்பந்து போட்டியில் போர்ச்சுகல் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. அந்த அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ (37வது நிமிடம்), ஜோஸ் ஃபான்டே (48’), ஆந்த்ரே சில்வா (90’) கோல் போட்டனர். போர்ச்சுகல் அணிக்காக ரொனால்டோ தனது 112வது கோலை அடித்து அசத்தினார்.* துருக்கி பார்முலா 1 கிராண்ட் பிரீ பந்தயத்தில் மெர்சிடிஸ் வீரர் வால்டெரி போட்டாஸ் முதலிடம் பிடித்தார். ரெட் புல் ரேசிங் ஹோண்டா வீரர்கள் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன், செர்ஜியோ பெரஸ், பெராரியின் சார்லஸ் லெக்லர்க், மெர்சிடிஸ் வீரர் லூயிஸ் ஹாமில்டன் முறையே 2 முதல் 5 இடங்களை பிடித்தனர். டிரைவர்களுக்கான புள்ளி பட்டியலில் வெர்ஸ்டாப்பன் (262.5) முதலிடத்துக்கு முன்னேற ஹாமில்டன் (256.5) 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.* கத்தாரில் நடைபெற உள்ள உலக கோப்பை கால்பந்து தொடர் தனது கடைசி உலக கோப்பை போட்டியாக இருக்க வாய்ப்புள்ளதாக பிரேசில் நட்சத்திரம் நெய்மர் (29 வயது) தெரிவித்துள்ளார்.* உபெர் கோப்பை பேட்மின்டன் தொடரில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தியது.* ஐசிசி உலக கோப்பை டி20 தொடரில் நடுவர் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரும் டிஆர்எஸ் முறை அறிமுகமாகிறது.



from Dinakaran.com |11 Oct 2021 https://ift.tt/3uZQAbY
via IFTTT

Post a Comment

0 Comments