கோலாலம்பூர்: இந்தியாவில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து போட்டியின் பிரிவுகளை தீர்மானிப்பதற்கான குலுக்கலில், இந்திய அணி எ பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஏஎப்சி ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து போட்டியின் 20வது தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது (2022 ஜன.20 - பிப்.6). இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கான பிரிவை தீர்மானிக்கும் குலுக்கல் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (ஏஎப்சி) அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளர் தாமஸ் டென்னர்பி, சீன வீராங்கனை வாங் சுவாங், இந்தேனேஷிய பயிற்சியாளர் ரூடி ஏக பிரியம்பதா என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பயிறசியாளர்கள், வீராங்கனைகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். குலுக்கல் முறையில் ஆசிய கோப்பையில் பங்கேற்க உள்ள 12 அணிகளும் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.ஏ பிரிவு: இந்தியா, சீனா, சீன தைபே, ஈரான். பி பிரிவு: ஆஸ்திரேலியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா.சி பிரிவு: நடப்பு சாம்பியன் ஜப்பான், கொரிய குடியரசு, வியட்நாம், மியான்மர்.* ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்கள் பிடிக்கும் 6 அணிகளும், 3இடம் பிடிக்கும் 3 அணிகளில் சிறந்த 2 அணிகள் என மொத்தம் 8 அணிகள் காலிறுதிக்கு தகுதிபெறும். இறுதி ஆட்டம் பிப்.6ம் தேதி நடைபெறும். போட்டி நடைபெறும் இடம், நேரம், அணிகள் உள்ளிட்ட முழு விவரங்கள் கொண்ட அட்டவணை பின்னர் வெளியாகும்.* ஆசிய கோப்பையில் முதல் 5 இடங்களை பிடிக்கும் அணிகள் பிபா மகளிர் உலக கோப்பைக்கு நேரடியாக தகுதிபெறும். மகளிர் உலக கோப்பை தொடரை 2023ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணைந்து நடத்த உள்ளன.
from Dinakaran.com |30 Oct 2021 https://ift.tt/3bpYSkh
via IFTTT
0 Comments