ஜோதிடம்

* நிறவெறிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் களத்தில் மண்டியிட வேண்டும் என்ற உத்தரவை ஏற்க மறுத்து வெஸ்ட் இண்டீசுடனான லீக் ஆட்டத்தில் இருந்து விலகிய தென் ஆப்ரிக்க விக்கெட் கீப்பர் டி காக், தனது நிலையை மாற்றிக்கொண்டு ‘நான் நிறவெறிக்கு ஆதரவானவன் இல்லை. களத்தில் மண்டியிடுவதன் மூலமாக மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க முடியும் என்றால் அதை செய்யத் தயங்க மாட்டேன்’ என்று தெரிவித்துள்ளார். இதனால் எஞ்சியுள்ள ஆட்டங்களில் அவர் விளையாடுவது உறுதியாகி உள்ளது.* உலக கோப்பை டி20 தொடரின் பைனலில் இந்தியா - பாகிஸ்தான் மீண்டும் மோத வேண்டி வந்தால் அது மிகச் சிறப்பான போட்டியாக இருக்கும் என்று பாக். பயிற்சியாளர் ஷக்லைன் முஷ்டாக் கூறியுள்ளார்.* பார்சிலோனா கால்பந்து அணி தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், பயிற்சியாளர் ரொனால்டு கோமன் அதிரடியாக நீக்கப்பட்டு தற்காலிக பொறுப்பில் பி அணி பயிற்சியாளர் செர்ஜி பர்ஜுவான் நியமிக்கப்பட்டுள்ளார். * ஏடிகே மோகன் பகான் கால்பந்து அணியின் நிர்வாக இயக்குனர் பொறுப்பில் இருந்து விலகுவதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார்.



from Dinakaran.com |29 Oct 2021 https://ift.tt/3Cl4zfg
via IFTTT

Post a Comment

0 Comments