ஜோதிடம்

10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இண்டியன் வெல்ஸ் தொடரில் களமிறங்கிய பெல்ஜியம் வீராங்கனை கிம் கிளைஸ்டர்ஸ் (38 வயது, 1476வது ரேங்க்), தனது  முதல் சுற்றில் செக் குடியரசு வீராங்கனை  கேதரினா சினியகோவாவுடன் (25வயது, 53வது ரேங்க்) மோதினார். நீண்ட இடைவெளி, உடல் பருமன்  காரணமாக பந்துகளை ஓடிச் சென்று அடிப்பதில் தடுமாறினார். முதல் செட்டை சினியகோவா 6-1 என கைப்பற்றிய நிலையில், 2வது செட்டில் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய கிம் 6-2 என வென்று பதிலடி கொடுத்தார். எனினும், கடைசி செட்டில் அதிரடி காட்டிய சினியகோவா 6-1, 2-6, 6-2 என்ற கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 36 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.



from Dinakaran.com |09 Oct 2021 https://ift.tt/3ApjPGe
via IFTTT

Post a Comment

0 Comments