ஜோதிடம்

குயின்ஸ்லாந்து: ஆஸ்திரேலியா மகளிர்-இந்திய மகளிர் இடையிலான முதல் டி20 ஆட்டம் நேற்று குயின்ஸ்லாந்தில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் ரேணுகா, யாஷ்டிகா,  ஆஸி அணியில்  தஹிலா, ஹன்னா   என 4 பேர் புதிதாக களமிறங்கினார். முதலில் களமிறங்கிய இந்திய அணியின்  வீராங்கனைகள்  ஸ்மிரிதி 17, ஷபாலி 18, கேப்டன் ஹர்மன்பிரீத் 12, யாஷ்டிகா 15 என அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர்.  அதே நேரத்தில்  ஜெமீமா,   ரிச்சாஇணை பொறுப்புடன் விளையாடிய போது மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது.  ஆனால் மழை நிற்காததால்,  ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அப்போது இந்தியா 15.2ஓவரில் 4விக்கெட் இழப்புக்கு  131ரன் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. ஜெமீமா 49*, ரிச்சா 13* ரன்னுடன் களத்தில் இருந்தனர்.  ஆஸி தரப்பில்  8 பேர் பந்து வீசியதில்  ஆஷ்லி 2,  ஜார்ஜியா,ஷோபியா தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 



from Dinakaran.com |08 Oct 2021 https://ift.tt/3BrKhQQ
via IFTTT

Post a Comment

0 Comments