* பிஎஸ்ஜி அணி நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, லெய்ப்ஸிக் அணியுடனான சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் இருந்து காயம் காரணமாக விலகி உள்ளார்.* உலக கோப்பை தொடருக்குப் பின்னர் டி20 போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகப் போவதாக கோஹ்லி ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணியின் கேப்டனாக அவர் நீடிப்பாரா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.* டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் மோசமான செயல்பாட்டுக்கு, வீரர்கள் தேர்வில் சொதப்பியது, ஐபிஎல் தொடர் முடிந்தது போதிய ஓய்வு இல்லாமல் உலக கோப்பையில் விளையாடுவது மற்றும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ‘பயோ பபுள்’ பாதுகாப்பு வளையத்தில் இருப்பதால் ஏற்பட்ட மனச்சோர்வே காரணம் என ஆன்லைனில் நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பில் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.* இந்திய அணி கேப்டன் கோஹ்லியின் குடும்பத்தினருக்கு ஆன்லைனில் மிரட்டல் விடுக்கப்படுவதாக தகவல் வெளியானது குறித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி போலீசாருக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.* இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் விண்ணப்பித்துள்ளதாக விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.* சர்வதேச டி20 போட்டிகளில் அதிக வெற்றிகளைக் குவித்த கேப்டன்கள் பட்டியலில் இங்கிலாந்தின் இயான் மார்கன் (43 வெற்றி) முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார். இந்தியாவின் தோனி மற்றும் ஆப்கானிஸ்தானின் அஸ்கர் ஆப்கன் (தலா 42 வெற்றி) இருவரும் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டனர்.* 2 ஆண்டுகளுக்கு முன்பாக அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்த ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங், ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று அடுத்த ஆண்டு மீண்டும் களமிறங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
from Dinakaran.com |03 Nov 2021 https://ift.tt/2ZQyg9S
via IFTTT
0 Comments