அபுதாபி: உலக கோப்பை டி20 தொடரின் முதல் அரை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று நியூசிலாந்து அணி பைனலுக்கு முன்னேறியது. அபுதாபியில் நேற்றிரவு நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்தது. அதிகபட்சமாக மொயீன் அலி 37 பந்தில் ஆட்டமிழக்காமல் 51 ரன் (2 சிக்சர், 3 பவுண்டரி) விளாசினார். மாலன் 41 ரன் (30 பந்து), பட்லர் 29 ரன் (24 பந்து), லிவ்விங்ஸ்டன் 17 ரன் (10 பந்து), பயர்ஸ்டோ 13 ரன் (17 பந்து) எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 19 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன் எடுத்து வெற்றி பெற்றது. துவக்க ஆட்டக்காரர் மிட்செல் ஆட்டமிழக்காமல் 72 ரன் (47 பந்து, 4 சிக்சர், 4 பவுண்டரி) குவித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார். கான்வே 38 பந்தில் 46 ரன் விளாசினார். கப்தில் 4, வில்லியம்சன் 5, பிலிப்ஸ் 2, நீஷம் 27 ரன்னில் ஆட்டமிழந்தனர். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.
from Dinakaran.com |11 Nov 2021 https://ift.tt/3kp9Rzy
via IFTTT
0 Comments