ஜோதிடம்

ஜெய்பூர்: இந்திய அணியுடனான முதல் டி20 போட்டியில், கப்தில் மற்றும் சாப்மேன் அதிரடி அரை சதத்தால் நியூசிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன் குவித்தது. சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இந்திய அணியில் வெங்கடேஷ் அய்யர் (26 வயது) அறிமுகமானார். மார்டின் கப்தில், டேரில் மிட்செல் இருவரும் நியூசிலாந்து இன்னிங்சை தொடங்கினர். புவனேஷ்வர் வேகத்தில் டேரில் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேற, நியூசி.க்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. அடுத்து கப்திலுடன் மார்க் சாப்மேன் இணைந்தார். இருவரும் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். சாப்மேன் 45 பந்தில் அரை சதம் அடித்தார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 109 ரன் சேர்த்தது. சாப்மேன் 63 ரன் (50 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), கிளென் பிலிப்ஸ் (0) இருவரும் அஷ்வின் சுழலில் அடுத்தடுத்து வெளியேறினர். கப்தில் 31 பந்தில் அரை சதத்தை நிறைவு செய்தார். அதிரடியாக விளையாடிய அவர் 70 ரன் (42 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். செய்பெர்ட் 12 ரன், ரச்சின் 7 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். நியூசிலாந்து 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன் குவித்தது. சான்ட்னர் 4 ரன், கேப்டன் சவுத்தீ (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில் அஷ்வின், புவனேஷ்வர் தலா 2, தீபக் சாஹர், முகமது சிராஜ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 20 ஓவரில் 165 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.



from Dinakaran.com |18 Nov 2021 https://ift.tt/3CpVwZN
via IFTTT

Post a Comment

0 Comments