ராஞ்சி, நவ. 20: நியூசிலாந்து அணியுடனான 2வது டி20 போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது. நியூசி. அணியில் பெர்குசன், ரச்சின், ஆஸ்டில் ஆகியோருக்கு பதிலாக மில்னே, சோதி, நீஷம் இடம் பெற்றனர். கப்தில், டேரில் மிட்செல் இருவரும் நியூசி. இன்னிங்சை தொடங்கினர். கப்தில் 31 ரன் (15 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), சாப்மேன் 21 ரன் (17 பந்து, 3 பவுண்டரி), மிட்செல் 31 ரன் (28 பந்து, 3 பவுண்டரி), பிலிப்ஸ் 34 ரன் (21 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்), செய்பெர்ட் 13 ரன், நீஷம் 3 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். நியூசிலாந்து 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்தது. சான்ட்னர் 8, மில்னே 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.இந்திய பந்துவீச்சில் ஹர்ஷல் 2, அஷ்வின் (4-0-19-1), அக்சர், தீபக், புவனேஷ்வர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் - கே.எல்.ராகுல் இணைந்து வலுவான தொடக்கத்தை கொடுத்தனர். இந்தியா 17.2 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 155 ரன் எடுத்து தொடர்ச்சியாக 2வது வெற்றியை வசப்படுத்தியது.கே எல் ராகுல் அதிகபட்சமாக 65ரன் (49 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), ரோகித் சர்மா 55 ரன் (36 பந்து, 1 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினர். ரிஷப்பந்த் 12 ரன், வெங்கடேஷ் ஐயர் 12 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 2-0 என முன்னிலை பெற்ற இந்தியா தொடரையும் கைப்பற்றிய நிலையில், கடைசி டி20 போட்டி கொல்கத்தாவில் நாளை நடக்கிறது.
from Dinakaran.com |20 Nov 2021 https://ift.tt/3qUvY54
via IFTTT
0 Comments