ஜோதிடம்

வெஸ்ட் இண்டீஸ் அணி ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ (38), ஐசிசி உலக கோப்பை டி20ல் இன்று ஆஸ்திரேலிய அணியுடன் நடக்க உள்ள லீக் ஆட்டத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். இலங்கை அணிக்கு எதிராக நடந்த லீக் ஆட்டத்தில் மண்ணைக் கவ்விய நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இந்த தோல்வியை தொடர்ந்து தனது ஓய்வு முடிவை அறிவித்த பிராவோ, இதுவரை 40 டெஸ்டில் 2200 ரன் (அதிகம் 113, சராசரி 31.42, சதம் 3, அரை சதம் 13) மற்றும் 86 விக்கெட் எடுத்துள்ளார். மேலும், 164 ஒருநாள் போட்டிகளில் 2968 ரன் (அதிகம் 112*, சராசரி 25.36, சதம் 2, அரை சதம் 10) மற்றும் 199 விக்கெட்; 90 டி20 போட்டியில் 1245 ரன் (அதிகம் 66*, சராசரி 22.23, அரை சதம் 4) மற்றும் 78 விக்கெட் எடுத்துள்ளார்.



from Dinakaran.com |06 Nov 2021 https://ift.tt/3mPIYpY
via IFTTT

Post a Comment

0 Comments