ஜோதிடம்

* ஏடிபி பைனல்ஸ் தொடரில் இருந்து கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் காயம் காரணமாக விலகியுள்ளார். முதல் போட்டியில் ஆந்த்ரே ருப்லேவிடம் தோற்ற சிட்சிபாஸ், அடுத்து கேஸ்பர் ரூடுடன் மோதவிருந்த நிலையில் முழங்கை காயத்தால் விலக நேரிட்டது. அவருக்கு பதிலாக தரவரிசையில் 12வது இடத்தில் உள்ள கேமரான் நோரி (இங்கி.) விளையாட உள்ளார்.* ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் கே.எல்.ராகுல் 5வது இடத்தில் இருந்து 6வது இடத்துக்கு பின்தங்கியுள்ளார். கோஹ்லி 8வது இடத்தில் நீடிக்கிறார்.* ஆஸ்திரேலியாவில் நடக்கும் மகளிர் பிக் பாஷ் டி20 தொடரில் மெல்போர்ன் ரெனகேட்ஸ் 175 ரன் குவித்த நிலையில், சேஸ் செய்த சிட்னி தண்டர் 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. அந்த அணிக்காக விளையாடும் இந்திய நட்சத்திரம் ஸ்மிரிதி மந்தனா 114 ரன் (64 பந்து, 14 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசியும், மற்ற வீராங்கனைகள் சொதப்பியதால் வெற்றி கை நழுவியது.* காயம் காரணமாக ஓய்வெடுத்து வரும் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர், ஜனவரியில் நடக்க உள்ள ஆஸி. ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடரில் களமிறங்கப் போவதில்லை என அறிவித்துள்ளார். விம்பிள்டனில் விளையாடுவதும் சந்தேகமே என அவர் தெரிவித்துள்ளது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.* சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட 162 வீரர், வீராங்கனைகள் மற்றும் 84 பயிற்சியாளர்களுக்கு, இந்திய விளையாட்டு ஆணையம் ரொக்கப்பரிசு, விருது வழங்கி கவுரவித்துள்ளது.



from Dinakaran.com |18 Nov 2021 https://ift.tt/32597cp
via IFTTT

Post a Comment

0 Comments