பாலி: இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, இந்தியாவின் பி.வி.சிந்து தகுதி பெற்றார். காலிறுதியில் துருக்கி வீராங்கனை நெஸ்லிஹான் யிஜித்துடன் மோதிய சிந்து (7வது ரேங்க்) 21-13, 23-10 என நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 35 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. அரையிறுதியில் ஜப்பானின் அகானே யாமகுச்சியுடன் (3வது ரேங்க்) சிந்து இன்று மோதுகிறார். ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்திய வீரர்கள் கிடாம்பி ஸ்ரீகாந்த் - எச்.எஸ்.பிரனாய் மோதினர். இதில் ஸ்ரீகாந்த் 21-7, 21-18 என நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
from Dinakaran.com |20 Nov 2021 https://ift.tt/3oN9ekr
via IFTTT
0 Comments