டெல்லி: சையத் முஷ்டக் அலி கோப்பை டி20 தொடரின் காலிறுதி ஆட்டங்கள் நேற்று டெல்லியில் நடந்தன. முதல் காலிறுதியில் தமிழ்நாடு-கேரளா அணிகள் மோதின. டாஸ் வென்ற தமிழகம் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய கேரளா 20ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 181ரன் குவித்தது. அந்த அணியின் விஷ்ணு வினோத் ஆட்டமிழக்காமல் 65*, ரோஹன் 51, சச்சின் பேபி 33 ரன் குவித்தனர். தொடர்ந்து விளையாடிய தமிழ்நாடு தொடக்க ஆட்டக்காரர் நாரயண் ஜெகதீசன் ஒரு சிக்சர் விளாசி 7 ரன்னில் ஆட்டமிழக்க அணியில் லேசான அதிர்வு ஏற்பட்டது. ஆனாலும் சாய் சுதர்சன் 46(31பந்து, 7பவுண்டரி), கேப்டன் விஜய் சங்கர் 33(26பந்து, 1பவுண்டரி, 2சிக்சர்), செழியன் ஹரிநிஷாந்த் 32(22பந்து, 2பவுண்டரி, 2சிக்சர்) ரன் விளாச தமிழ்நாடு வெற்றியை நோக்கி நகர்ந்தது. ஷாருக்கான் 19*(9பந்து, 2சிக்சர்), முகமது 6*(1பந்து, 1சிக்சர்) ஆகியோர் ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்தனர். அதனால் தமிழ்நாடு 19.3ஓவரில் 5 விக்கெட்களை இழந்து 187ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் கேரளாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
from Dinakaran.com |19 Nov 2021 https://ift.tt/3CzB8Fr
via IFTTT
0 Comments