ஜோதிடம்

துபாய்: உலக கோப்பை டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் அடங்கிய மதிப்பு வாய்ந்த கனவு அணியை ஐசிசி அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் பாபர் ஆஸம் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் (ஆஸி.), ஜாஸ் பட்லர் (இங்கி.) இடம் பெற்றுள்ளனர். சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறிய இந்திய அணியில் இருந்து ஒரு வீரர் கூட ஐசிசி கனவு அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஷாகீன் ஷா அப்ரிடி 12வது வீரராக இடம் பிடித்துள்ளார். ஐசிசி டி20 அணி: டேவிட் வார்னர், ஜாஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), பாபர் ஆஸம் (கேப்டன்), சரித் அசலங்கா (இலங்கை), எய்டன் மார்க்ரம் (தென் ஆப்ரிக்கா), மொயீன் அலி (இங்கிலாந்து), வனிந்து ஹசரங்கா (இலங்கை), ஆடம் ஸம்பா, ஜோஷ் ஹேசல்வுட் (ஆஸி.), டிரென்ட் போல்ட் (நியூசிலாந்து), அன்ரிச் நார்ட்ஜ் (தென் ஆப்ரிக்கா).



from Dinakaran.com |16 Nov 2021 https://ift.tt/3ni6TyF
via IFTTT

Post a Comment

0 Comments